26 மே, 2014


தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக 10 பேர் பதவியேற்பு
இணை அமைச்சர்களாக 12 பேர் பதவியேற்பு
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகளாக வி.கே.சிங், ரவோ இந்தர்ஜித் சிங், ஸ்ரீமத் நாயக்,
சந்தோஷ் கங்வார், தர்மேந்திர பிரதான், சர்பானந்த சோனாவல், பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், ஜிதேந்திர சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சர்களாக ஜி.எம்.சித்தேஸ்வரா, மனோஜ் சின்கா, நிகல் சந்த், உபேந்திரா குஷ்வாஹ், பொன் ராதாகிருஷ்ணன், கிரண் ரிஜிஜு, கிரிஷன் பால் குஜ்ஜார், சஞ்சீவ் குமார் பாலியான், மன்சுக்பாய் வாசவா, ராவ்சாகிப் தன்வீ, விஷ்ணுதேவ் சாய், சுதர்சன் பகத் ஆகியோர் பதவியேற்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார்.