புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2014

7 பெண் அமைச்சர்கள்,மகாராஷ்டிராவில் 6,மத்திய பிரதேசத்தில் 4,
உத்திரப்பிரதேசத்தில் 8 அமைச்சர்கள்

மோடி அமைச்சரவையில் உத்திரப்பிதேசத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


ராஜ்நாத் சிங், உமா பாரதி, கல்ராஜ் மிஸ்ரா, மேனகா காந்தி, வி.கே.சிங், சந்தோஷ் சங்வார், சஞ்சீவ் குமார், மனோஜ் சின்ஹா ஆகிய 8 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மோடி அமைச்சரவையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


நிதின் கட்கரி, கோபிநாத் முண்டே, ஆனந்த் கீதே, பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், ராவ் சாகிப் தாதாராவ் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மோடி அமைச்சரவையில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து சுஷ்மா சுவராஜ், ராதாமோகன் சிங், நரேந்திரசிங் தோமர், தாவர் சந்த் கெலாட் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
 

இவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 7 பேர் பெண்கள் ஆவர்.

சுஷ்மா சுவராஜ், மேனகா காந்தி, உமா பாரதி, நஜ்மா ஹெப்துல்லா, நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி ராணி, ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

ad

ad