புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2014

ராஜபக்சே வருகையை கண்டித்து டெல்லியில் கருப்புக்கொடிபோராட்டத்தில்  ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட் மதிமுகவினர் கைது .மேலதிக படங்கள் செய்திகள் 

இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து டெல்லியில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட் மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று காலை டெல்லி வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பேசிய வைகோ, இன்று மகிழ்ச்சியும், பெரும் துக்கமும் நிறைந்த ஒரு முக்கியமான நாள். பெரும் பெற்றி பெற்று இந்தியாவின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு நாளும், இந்திய தமிழர்களின் இதயத்தில் ஈட்டியாய் குத்திக்காயம் ஏற்பட்ட நாளுமாகும். தேசிய ஜனநாயக கூட்டணியில் நரேந்திர மோடி யாருடைய தயவும் தேவையின்றி 272 இடங்களுக்கு மேல் பெற்று இந்திய பிரதமராவார் என்று நான் ஜனவரி மாதத்திலேயே குறிப்பிட்டேன். அதுதான் இப்போது நடந்துள்ளது.
இந்த வெற்றிக்கும், பிரதமராகும் மோடிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் இந்த பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டிருப்பதை ம.தி.மு.க சார்பிலும் மற்றும் ஈழத் தமிழர்களின் சார்பிலும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜபக்சே ஒரு இனத்தையே கூண்டோடு அழித்த மகாபாவி. இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை, குழந்தைகளை ஈவு இரக்கமின்றி தனது படைகள் மூலம் கொன்று குவித்த இனப்படுகொலையாளி. அத்தகையை கொடூரமான ராஜபக்சேவை இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பது தமிழர்களின் மனதை வேதனைப்படுத்தியுள்ளது.
மோடி பிரதமராக பதவியேற்கும் இந்த நேரம் ஈழத்தமிழர்களின் வாழ்வில் முக்கியமான நேரமும், அவசியமான நேரமும் கூட. இதை மோடி புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தை முற்றுகையிட வைகோ மற்றும் மதிமுகவினர் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், பின்னர் கைது செய்தனர்.

ad

ad