புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2014


புலிச் சந்தேகநபர் எனக் கூறப்படுபவரின் கடவுச் சீட்டை தூதரக அதிகாரிகள் புதுப்பித்துள்ளனர்
தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர் என கூறப்படுபவரின் கடவுச் சீட்டை கோலாலம்பூருக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் புதுப்பித்துக் கொடுத்துள்ளனர்.
காலாவதியான கடவுச் சீட்டை இலங்கைத் தூதரக அதிகாரிளிடம் வழங்கி புதுப்பித்துக் கொண்டதாக குறித்த புலிச் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் படைப் பிரிவு இரண்டாம் நிலைத் தலைவராக கருதப்படும் குசாந்தன் எனப்படும் முள்ளிச்செல்வம் என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடவுச் சீட்டை புதுப்பித்துக் கொடுத்த தூதரக அதிகாரிகள் குசாந்தனை அடையாளம் காணவில்லை என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரே குசாந்தனை கைது செய்துள்ளனர்.
கடந்த 15ம் திகதி குசாந்தன் உள்ளிட்ட மூன்று பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்ததுடன், கடந்த 25ம் திகதி இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
குறித்த மூன்று பேரிடமும் பயங்கரவாதத் தடைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad