வேலணை மத்திய கல்லூரிக்கு புதிய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல்

மஹிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இன்று காலை 10மணியளவில் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி அடிக்கல் நாட்டி வைத்தார்.
இந்நிகழ்விற்கு வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரர் அலென்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்