புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூன், 2014


வாடிக்கையாளருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க பூர்வீகா செல்போன் நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
திருப்பூர் மாவட்டம், உடுமலை, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (39). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்தாண்டு ஜூலை 31-ஆம் தேதி உடுமலை,
பழனி சாலையிலுள்ள “பூர்விகா” என்ற தனியார் முன்னணி செல்ஃபோன் விற்பனை நிறுவனக் கிளையில் ரூ.25,000 கொடுத்து சோனி நிறுவனத்தின் செல்ஃபோன் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

வீட்டுக்குச் சென்று பார்க்கையில் அந்த செல்ஃபோன் சரியாக வேலை செய்யவில்லை, இதுகுறித்து, அந்த செல்ஃபோன் நிறுவன விற்பனை கிளைக்கு கொண்டுசென்று போன் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், போனை விற்பனை செய்த “பூர்விகா” விற்பனை நிறுவன ஊழியர்கள், ஈஸ்வரன் கூறியதை எதையும் கவனிக்காமல், “சோனி” செல்ஃபோன் நிறுவன சேவை மையத்துக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
நான் உங்களிடம் தான் செல்போன் வாங்கினேன், நீங்கள்தான் இதை சரி செய்துகொடுக்கவேண்டும் என்று ஈஸ்வரன் போராடிப் பார்த்தும் வேலையாகவில்லை. கடைசியில், கோவையிலுள்ள “சோனி” நிறுவனத்தின் சேவை மையத்துக்கும் சென்று தனது போனை சரி செய்துகொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், “சோனி” சேவை மையமும் ஈஸ்வரனின் செல்ஃபோனை சரிசெய்து கொடுக்கவில்லை.

இதனால், வெறுப்படைந்த ஈஸ்வரன், கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், “பூர்விகா” நிறுவனத்தின் மீது இழப்பீடு கோரி சில நாள்களுக்கு முன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஈஸ்வரனுக்கு, “பூர்விகா” செல்ஃபோன் விற்பனை நிறுவனம் ரூ.10,000 இழப்பீடு மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.1,000, அதோடு அவர் வாங்கிய செல்ஃபோனை பெற்றுக்கொண்டு அதற்குரிய பணம் ரூ.25,000 ஆகியவற்றை ஒரு மாதத்துக்குள் திருப்பித் தர வேண்டும் என்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

ad

ad