புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2014


இலங்கை தனது பிரதான எதிரியாக ஊடகவியலாளர்களை கருதுகின்றது: ஊடகவியலாளர் தயாபரன், செல்வம் எம்.பி
யாழில் இருந்து கொழும்பு சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஓமந்தையில் நேற்று இரவு இராணுவத்தினர் திட்டமிட்டு செய்த சதி தொடர்பாக சிரேஸ்ட ஊடக
வியலாளர் தயாபரன் மற்றும் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் லங்காசிறி வானொலியின் விசேட செவ்வியில் கலந்து கொண்டு தமது கருத்து வெளியிட்டுள்ளனர்.
 ஓமந்தை இராணுவக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியே ஒத்துக் கொண்டார்.
பொலிஸார் கடமைக்குத் தான் உள்ளனர். சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினரே செய்கின்றனர். இலங்கை அரசு தனது பிரதான எதிரியாக ஊடகவியலாளர்களை கருதுகின்றது என்றார் சிரேஸ்ட ஊடகவியலாளர் தயாபரன்.
மேலும், ஊடகவியலாளர்கள் மீதான நெருக்குவாரம் வடக்கில் அதிகரித்து வருகின்ற நிலையில், வடக்கு- தெற்கு ஊடகவியலாளர்கள் இணைந்து வலுவான கூட்டமைப்பொன்றை உருவாக்க பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ் ஊடகவியலாளர்களை நொண்டிச் சாட்டுக் சொல்லி சிறையில் அடைக்க வேண்டுமென்பதே அரசின் குறியாக உள்ளது.
மண் மக்கள் சார்ந்து குரல் கொடுப்பவர்களுக்கு இதே நிலைதான். சர்வதேசத்திடம் முறையிடலாம். ஆனால் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயாது. ஏனெனில் தமிழர்கள் கேள்விக்குறியான, ஆடு மாடுகளை விட மோசமான நிலையில் பார்க்கப்படுகின்றனர் என செல்வம் அடைக்கலநாதன் எம்பி தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ad

ad