புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2014

புலிகளின் ஆயுதங்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம்! சில நாடுகளின் தூதுவர்கள் கோரினர்: கெஹெலிய
யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கில் விடுதலைப் புலிகளின் முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பல்வேறு உபகரணங்கள்
பற்றிய தகவல்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என சில நாடுகளின் தூதுவர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அது குறித்து தேடிப்பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பாடுகள் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையால் எந்த தரப்பாவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க பூரண சுதந்திரமும் சந்தர்ப்பமும் உள்ளது.
முப்பது வருட பாரிய யுத்தம் ஒன்று முடிவுக்கு வந்துள்ள சந்தர்ப்பத்தல் தேசிய பாதுகாப்பு தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்த வேண்டியது அத்தியவசியமானது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து செயற்படும் அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை தேடிப்பார்ப்பது மிகவும் அவசியமானது.
முக்கியமாக இவ்வாறான அமைப்புகள் இன அடிப்படையில் நபர்களை தெரிவு செய்து வாக்குரிமையை பயன்படுத்துவது மாத்திரமல்லாது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லி கொடுத்துள்ளதாகவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்

ad

ad