புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2014

Photo
ஜெயலலிதா, மோடியிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய இலங்கை


சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக இலங்கை அரசாங்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர்
ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில்,
 “நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை?” என மிகவும் கீழ்த்தரமாக அந்தக் கட்டுரைக்கு தலைப்பும் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஜெயலலிதா மற்றும் மோடி ஆகியோரின் புகைப்படங்களைக் கொண்டு, சர்ச்சைக்குரிய சித்தரிப்புப் படம் ஒன்றும் வெளியாகியிருந்தது.
இந்தப் பதிவு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சர்ச்சைக்குரிய அந்தக் கட்டுரையை தமது தளத்தில் இருந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக நீக்கியது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.
சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியான அதே அரசாங்க வலைதளத்தில் பகிரங்க மன்னிப்புக் கடிதமும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் அக்கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளியிட்டுள்ள மன்னிப்புக் கடிதத்தில்,
“தகுந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் பதிவேற்றப்பட்டுவிட்டது. அந்தக் கட்டுரையானது இலங்கை அரசின் நிலைப்பாட்டையோ, பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கருத்தையோ எந்தவகையிலும் பிரதிபலிக்கவில்லை. அதை நீக்கிவிட்டோம். பிரதமர் நரேந்திர மோடியிடமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம்"
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி-
இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் ஜெயலலிதாவை விமர்சித்த கட்டுரை நீக்கம்! இலங்கை மன்னிப்புக் கோர வேண்டும்: ஜே

ad

ad