புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2014

2 நாட்களில் 16 இடங்களில் 56 பவுன் நகை கொள்ளை; விமானத்தில் வந்து கொள்ளையடித்த இருவர் கைது


கடந்த 11, 12 ஆகிய இரு நாட்களில், சேலம் நகரில் உள்ள பல இடங்களில் நடந்து போன பெண்களிடம் கருப்பு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாட்களில் மட்டும் 16 இடங்களில் நடந்த நகை பறிப்பு சம்பவங்களில் மொத்தம் 56 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. 

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நகை பறிப்பில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நான்கு ஆட்களும் சம்மந்தப்படிருப்பது தெரியவந்தது.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது, இவர்கள் பழைய திருடர்கள் சிலரை பிடித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சேலம் ஐந்து ரோடு அருகே வாகன தணிக்கையில் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு பல்சர் மோட்டார் சைக்கிளில் தலையில் ஹெல்மேட்டுடன் வந்த இருவரை பிடித்த போலீசார் அவர்களின் வண்டிக்கான ஆவணங்களை கேட்டுள்ளனர்.

முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர்களை சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணை மேற்கொண்டதில், இவர்களுடன் மேலும் இருவர் சேர்ந்து தான் சேலத்தில் 16 இடங்களில் தங்க நகைகள் பறித்து தெரியவந்தது.

இவர்களுடன் மேலும் இரண்டு பேர் பெங்களூரிலிருந்து தனியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரும் முன்கூட்டியே பெங்களூர் வழியாக லூதியான சென்று விட்டதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர்.

அமர்குமார் சர்மா (வயது 28) உத்தரபிரதேசமாநிலத்தை சேர்ந்தவன், இன்னொருவன் பெயர் ரவிக்குமார் (வயது-28), ஹரியானா மாநிலம் லூதியானா நகரை சேர்த்தவன்.

சேலத்தில் திருடிய 56 பவுன் தங்க நகைகளும் லூதியானாவிற்கு கொண்டு சென்று பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பிறகு, கஸ்டடியில் எடுத்து ஹரியானா மாநிலத்துக்கு கூட்டிச்சென்று சேலத்தில் திருடிய நகைகளை மீட்டு வர முயற்சி மேற்கொண்டு உள்ளனர். கைதான இருவரும் புதன்கிழமை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ad

ad