புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2014

தந்தை செல்வாவுக்கு தளபதிகளாகவும் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் பலர்.இவர்களில் முதன்மையானவராக வன்னியசிங்கமே இருந்தார்.-மாவை 
காலிமுகத்திடலில் இடம் பெற்ற சத்தியக்கிரகப் போராட்டதை குழப்பி அதில் கலந்துகொண்டவர்களை பொல்லுகள் கற்கள்கொண்டு தாக்கி காயப்படுத்திய சம்பவத்தின் பின்னணியாக இருந்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா என்றே கூறப்படுகின்றது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நீர்வேலியில் அமரர் வன்னியசிங்கத்தின் 55 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தந்தை செல்வாவுக்கு தளபதிகளாகவும் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் பலர்.  அதில் வன்னியசிங்கம், நவரத்தினம் மற்றும் இளையவர்களில் அமிர்தலிங்கம் என பலர் இருந்தார்கள்.
ஆனால் இவர்களில் முதன்மையானவராக வன்னியசிங்கமே இருந்தார். தந்தை செல்வா 1958ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் இலங்கை தமிழரசுக் கட்சி நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தையுடன் கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர் அமரர் வன்னியசிங்கம்.
சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டவர்கள் குண்டர்களினால் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா என்றே கூறப்படுகிறது.
இவர்கள் தாக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் நாடாளுமன்றம் சென்ற வேளை, "உங்களுக்கு சிறைத் தண்டனை வழங்கவேண்டும்" என்றார் அங்கிருந்த அமைச்சர் ஒருவர்.
அதற்குப் பதிலளித்த வன்னியசிங்கம் - "நீங்களும் ஒரு சட்டதரணி நானும் ஒரு சட்டத்தரணி. ஆனால் நீங்கள் நீண்ட காலம் நீதிமன்றம் செல்லாததால் சட்டத்தை மறந்து விட்டீர்கள். நான் இன்னும் சட்டத்தை மறக்கவில்லை. "எனக்கும் இதைப் பற்றிய சட்டம் எல்லாம் தெரியும்." என்று கூறி அவரை பேசவிடாது தடை செய்தார் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ad

ad