புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2014

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: கேரளா அணிக்கு 4-வது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொச்சியில் நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-
அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அபாரமான ஆட்டத்தில் மூலம் கொல்கத்தா அணிக்கு கடும் நெருக்கடி அளித்தது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் கேரளா அணி முதல் கோல் அடித்தது. பெட்ரோ குசாமோ கடத்தி கொடுத்த பந்தை இயான் ஹூம் கோலாக்கினார். 42-வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-வது கோலை பதிவு செய்து வலுவான நிலையை எட்டியது. இந்த கோலை பெட்ரோ குசாமோ அடித்தார். 

55-வது நிமிடத்தில் கொல்கத்தா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் பிக்ரு இந்த கோலை திணித்தார். இதன் பிறகு கடைசி நிமிடத்தில் கொல்கத்தா கேப்டன் லூயிஸ் கார்சியா அடித்த ஷாட், கேரள கோல் கீப்பரின் கைகளில் பட்டு சற்று உள்ளே விழுந்தது. பிறகு கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை உடனடியாக இன்னொரு கேரள வீரர் வெளியே தள்ளினார். 

ஆனால் இதனை கோல் அல்ல என்று உதவி நடுவர் அறிவித்து, கொல்கத்தா வீரர்களை திகைப்புக்குள்ளாக்கினார். டி.வி. ரீப்ளேயில் பந்து கோல் லைனை கடந்திருப்பது தெளிவாக தெரிந்தது. உதவி நடுவரின் தவறான கணிப்பால் கொல்கத்தாவின் சமன் செய்யும் வாய்ப்பு நழுவிப் போனது. 

முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. இதுவரை 10 லீக் ஆட்டங்களில் விளையாடி இருக்கும் கொல்கத்தா அணி 4 வெற்றி, 4 டிரா, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. 10 ஆட்டங்களில் ஆடி இருக்கும் கேரளா அணி 4 வெற்றி, 3 டிரா, 3 தோல்வியுடன் 15 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. 

இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு கோவாவில் நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-எப்.சி.புனே சிட்டி அணிகள் சந்திக்கின்றன. 

ad

ad