புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014


இலங்கைத் தமிழர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது 
 வைத்தியசாலையில் இருந்து, சிறை முகாமிற்கு திரும்பிய இலங்கை தமிழர்கள், நேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர். 

 
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள முகாம் சிறையில், பல்வேறு குற்றவழக்கில் க்யூ பிரிவு பொலிஸாரல் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட 32 பேர் அடைக்கப்பட்டனர். 
 
இவர்கள், தங்களை விடுவிக்க கோரி, கடந்த, 15  ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்தனர். கடந்த, 18  ஆம் திகதி, நாகை நீதிமன்ற விசாரணைக்கு செல்ல மறுத்து, உண்ணாவிரதம் இருந்த, 26 பேர் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். 
 
அவர்கள் அனைவரும், அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில், ஈழநேரு, கருணை ராஜா ஆகியோர் மீது, கே.கே.நகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். 
 
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, ஈழநேருவை, சென்னை புழல் சிறைக்கு மாற்றினர். வைத்தியசாலையில் சிகிச்சை முடித்து, முகாம் சிறைக்கு திரும்பிய, 17 பேர், நேற்று மாலை தொடர் உண்ணாவிரதத்தை கைவிட்டனர் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ad

ad