புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2015

அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் கொழும்பில் கூட்டமைப்பின் தலைமையுடன் அவசர சந்திப்பு!


அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று கொழும்பிற்குச் சென்று த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து அம்பாறை மாவட்டத்தின் இன்றைய கலநிலவரங்கள் பற்றியும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடியுள்ளார்கள்.
இக்கலந்துரையாடலில் சர்வதேச மட்டத்தில் தமது பிரச்சினைகளை முன்னிறுத்தி எமது மக்களின் அவல நிலைமைகளை வெளிப்படுத்தி வருபவரும், சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமத்திரனும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கலந்துரையாடலானது அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபையின் தவிசாளர் கே.ரெட்ணவேல் தலமையில் நடைபெற்றது.
இதில் அம்பாறை மாவட்ட பிரதேசசபையின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், கல்முனை மாநகரசபையின் மாநகரசபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அவர்கள் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போது அம்பாறை மாவட்டமானது போராட்ட காலங்களில் இருந்து இன்று வரை மிகுந்த துன்ப துயரங்களை அனுபவித்து வரும் மாவட்டமாகும். அதனடிப்படையில் அங்குள்ள மக்கள் சொல்லொன்னா துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள்.
இந்த துன்ப துயரங்களிலிருந்து எமது மக்களை விடுவிக்க வேண்டுமாக இருந்தால் அவர்களது அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது எங்களது தலையாய கடமையாக இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் கிழக்கு மாகாண சபை எமது தலைமையின் கீழ் அமையவிருப்பதால் நிச்சயமாக அதில் எமது மாவட்டத்தற்கும் உரிய பங்கீட்டினை வழங்க முன்வரவேண்டும். அப்போதுதான் மக்கள் மனங்களை வென்று அவர்களுக்கான தேவைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
எமது மாவட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனது சொந்த நலனுக்காக அரசு பக்கம் சார்ந்தமையினால் எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் போனது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் அதிகூடிய வாக்குகளை அளித்து இரண்டு மாகாணசபை உறுப்பினர்களையும் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது எனவும் கேட்டுக்கொண்டனர்.
அவர்களது கருத்துக்களை பொறுமையாக செவிமடுத்து கேட்டுக் கொண்டிருந்த தலைவர் இரா.சம்பந்தன் கருத்துக் கூறுகையில்,
உங்களது அனைத்து கோரிக்கைகளையும் தாங்கள் கூடி ஆராய்வதாகவும் எதிர்வரும் காலத்தில் அமையப் போகும் கிழக்கு மாகாணசபையில் அம்பாறை மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பாக மிகுந்த அக்கறையுடன் செயற்பட இருப்பதாகவும் இதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்படுவதனைப் போன்று எதிர்வரும் காலங்களிலும் ஒற்றுமையாக இருந்து செயற்பட உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ad

ad