புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 பிப்., 2015

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு: வடக்கில் பிரேரணை நிறைவேற்றம்


புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சலுகை வழங்கி அவர்களின் தகைமைகளுக்கேற்ப பதவிகளை வழங்க வேண்டும் எனும் பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபை அமர்வின் போது நேற்று வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தனினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
வடக்கு மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக போராடியவர்கள் இன்று யாருமற்ற அனாதைகளாக நிர்க்கதியாகவுள்ளனர்.
மாவீரர் நாளை நினைவு கூறுதல், துயிலும் இல்லங்களை நிறுவுதல், குறித்து பேசப்பட்டு வருகின்றது, எனினும் தாய் மண்ணிற்காக போராடிய போராளிகளை குறித்து நாம் சிந்திக்க மறுப்பதினால்தான் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு அரச உத்தியோகங்கள் வழங்கப்பட வேண்டும், அத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதோடு பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார்.