இனப்படுகொலை செய்யப்பட்ட மூன்றரை லட்சம் தமிழீழ மக்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும். ஐ.நா சபை தாமதமின்றி போர்க்குற்ற விசாரணை அறிக்கை உடனே வெளியிடக் கோரி பேரணி நடத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
யாழ் பேரணிக்கு ஆதரவாக சென்னையில் சமநேரத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச ஆதரவலை மீண்டும் இலங்கை மீதும் தமிழ் மக்கள் மீதும் திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான கோரிக்கைகள் இந்த ஆட்சி மாற்றத்தால் மீண்டும் பின்தள்ளப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை , 28வது மார்ச் மாத கூட்டத் தொடரிலே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இலங்கையின் ஆட்சிமாற்றம் காரணமாக போர்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை மேலும் ஆறு மாதம் ஒத்திவைக்க ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
தாமதிக்கப்பட்ட நீதி தொடரும், குற்றச்செயல்களை ஊக்குவிக்கும். மேலும் இது அநீதிக்கு சமமாகவே கருதப்படும்.
- யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் பேரணியில் அலையெனத் திரண்ட மக்கள்! சிங்கள மாணவர்களும் பங்கேற்பு
- கவனயீர்ப்பு பேரணியில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை!
- எம் இன நீதிக்காய் ஓரணி திரண்ட ஈழ மக்களுக்கு… - யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது வெகுசன அமைப்புக்கள்.
- இலங்கையில் உள்ளவர்களிடம் தமிழர்கள் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது? -குற்றவாளியும் நீதிபதியும் ஒருவனாக இருக்க முடியுமா? - மன்னார் ஆயர்