புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2015

இந்தமண் எங்களின் சொந்த மண் ; விவசாய அமைச்சர் தெரிவிப்பு


  வலி தெற்கு பிரதேச சபையில் கொண்டாடப்பட்ட உலக தண்ணீர் தின நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது  இந்தமண் எங்களின் சொந்த மண் என்று மீண்டும் பாடுவோம் என வடமாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
 
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைய 1993 ம் ஆண்டு முதன்முறையாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கருப் பொருளை தண்ணீரை மையமாக கொண்டு உலக  தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
 
இந்த ஆண்டு தண்ணீரை எவ்வாறு நிலையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவது என்பதை  கருப்பொருளாக கொண்டு கொண்டாடப்படுகின்றது.
 
ஏற்கனவே ஆய்வாளர்கள் எச்சரித்தது போல் யாழ்ப்பாண குடாநாட்டு நன்னீர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
 
நாம் மேற்கொள்ளும் செறிவு வேளாண்மை காரணமாக நைத்திரேற் அளவு செறிந்து காணப்படுவது உறுதிப்படுத்தப் பட்ட ஒரு விடயம் என தெரிவித்த விவசாய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய சுழ்நிலையில் இன்னுமொரு பூதம் யாழ் குடாநாட்டில் உருவெடுத்துள்ளது.  
 
அதாவது வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் கழிவு எண்ணை கலந்திருக்கிறது என்பது நாங்கள் நீரில் எண்ணை கலப்பு இருக்ககூடாது என்று கருதுகிறோம் ஆனால் அதே சமயம் சிலர் எண்ணை கலப்பு இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
 
அன்பான பொது மக்களே நீண்ட காலத்தின் பின்னர் எமக்கு வாக்களித்து வடமாகாண சபை ஒன்றை இயங்க சந்தர்ப்பம் தந்துள்ளீர்கள் எங்களை நம்புங்கள் உங்கள் மீது எங்களுக்கு அக்கறை இருக்கின்றது.
 
எங்களுடைய தண்ணீரை மாசுக்களில் இருந்து நாங்களே மீட்டெடுப்போம் இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன் என்று சொல்லி  பாடிய நாங்கள் தண்ணீர் பிரச்சனைக்காக  எங்களுடைய சொந்த மண்ணை விட்டு எல்லையை விட்டு இடம்பெயர்ந்து போவதை நாங்கள் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம்.
 
இந்த மண்ணை எல்லா விதமான மாசுக்களில் இருந்தும் காப்பாற்றி அதாவது அரசியல் மாசு இராசயன மாசு சமூக விரோத மாசு எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றி இந்தமண் எங்களின் சொந்த மண் என்று மீண்டும் பாடுவோம் என்று தெரிவித்தார்

ad

ad