புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2015

8வது ஐ.பி.எல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்


மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அகமதாபாத் சர்தார் படேல் மைதானத்தில் நடைபெற்று வரும் 8வது ஐபிஎல் தொடரின் 9வது போட்டியில் மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது, தொடக்க வீரராக களமிறங்கிய ஆரோன் பின்ச் 10 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரரான அணித்தலைவர் பார்த்தீவ் படேல் 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மோரிஸிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய வீரர்கள் உன்முக்த் சந்த், ரோகித் சர்மா சொற்ப சொதப்ப களமிறங்கிய ஆண்டர்சன் 50 ஓட்டங்களும், பொல்லார்டு அரைசதம் கடந்து 70 ஓட்டங்களும் எடுத்தனர்.
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 165 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அஜின்கியா ரஹானே 46 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 17 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் கடந்து 79 ஓட்டங்களும் எடுத்தனர்.
ராஜஸ்தான் அணியின் ஸ்மித் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்

ad

ad