புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2015

ஜனநாயக நாட்டில் தாலி அணிந்து கொள்வது தனிநபர் விருப்பம்: குஷ்பு



திராவிடர் கழகம் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் 21 பெண்களுக்கு தாலி அகற்றப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா தொண்டர்கள் பெரியார் திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்து முன்னணி, இந்து மகாசபை உள்பட 10 அமைப்புகள் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிகழ்ச்சி தாலியில் நம்பிக்கை உள்ள பெண்களின் மனதை புண்படுத்தும் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், பெரியார் திரைப்படத்தில் மணியம்மையாக நடித்தவரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, நேற்று நடந்த தாலி அகற்றும் நிகழ்ச்சி குறித்து கருத்து கூ

பெரியார் காலத்தில் இருந்தே தாலி பற்றிய விவாதம் நடந்து வருகிறது. திராவிடர் கழகத்துக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அதன்படி அவர்கள் நடக்கிறார்கள்.

தினந்தோறும் தாலி கட்டிக்கொள்ளும் திருமணங்கள் நடைபெறுகின்றன. அவற்றை திராவிடர் கழகத்தினர் தடுத்து நிறுத்தவில்லை. தாலி கட்டும் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தங்கள் கருத்தை பதிவு செய்யும் விதத்தில் தான் இந்த நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.  தாலி கட்டுவதும், மறுப்பதும் முழுக்க முழுக்க ஒரு தனி நபரின் விருப்பம். தாலி கட்டிக்கொள்ளலாமா? கூடாதா? என்பதும் தனிநபர் விருப்பம் சம்பந்தப்பட்டது.

திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சி சரியா? தவறா? என்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதத்தில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதை ஏன் மற்றவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்? இது ஜனநாயக நாடு இதை வைத்து சமூகத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது’’என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ருத்ராட்ச மாலையை தாலிக்கொடியாக குஷ்பு அணிந்திருக்கிறார். இது இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று கும்பகோணம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad