புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2015

புங்குடுதீவில் இலவசக் கல்வி அளிக்கும் தாயகம் நிறுவனத்தின் சொக்கலிங்கம் அக்கடமியின் சேவை

sockalingam acadamey-jan.2015-002










புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களது
ஞாபகார்த்தமாக, நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட “சொக்கலிங்கம் அகடமி”யானது 2014 ஆண்டு எட்டாம் மாதம் தொடங்கி வெகு சிறப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே.
ஆரம்பத்தில் 18 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட எமது அகடமியானது பின்பு 28 பிள்ளைகளாக அதிகரித்து கல்வி நடவடிக்கைகள்; விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சுமார் 61 பிள்ளைகள் வரையில் அங்கு கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதுவரை காலமும் முதலாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்பு வரையான பிள்ளைகளுக்கே இங்கு பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்று வந்தன. எனினும் பிள்ளைகள் மற்றும் பெற்றோரது வேண்டுகோளுக்கிணங்க இதனை விரிவுபடுத்தி எட்டாம் வகுப்பு வரையிலான பிள்ளைகளுக்கு வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தற்போது கிட்டத்தட்ட 61 பிள்ளைகள் வரையில் கல்வி பயில்கின்றனர்.
இங்கு இரண்டு ஆசிரியைகள் கற்பித்தலை மேற்கொண்டு வருவது மாத்திமல்லாது பிரத்தியேகமாக மற்றொரு ஆசிரியரும் ஆங்கிலம் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்டு, கற்பித்தலை முன்னெடுத்து வருகின்றார் என்பதும் இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.
அதேவேளை “சொக்கலிக்கம் அகடமி”யை நேரடியாக பார்வையிட்ட அரச அதிகாரிகள் அதிலுள்ள “மலசலகூடம், தண்ணீர் தொட்டி, பாதுகாப்புக்கான நுழைவாயில் (படலை)”, போன்றவற்றை சீரமைத்து வழங்குமாறு கோரியதற்கு இணங்க அனைத்தும் தற்போது அமரர்கள் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை அவர்களது குடும்பத்தினரால் திருத்தியமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது.
அதேநேரம் இங்கு கல்வி பயிலும் பிள்ளைகளது வேண்டுகோளுக்கிணங்க அகடமியில் பயிலும் மாணவ, மாணவியருக்காக எதிர்வரும் 09.04.2015 அன்று மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியினை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் அறியத் தருகின்றோம். 
வாழ்க வளமுடன்,
இவ்வண்ணம்,
திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன்
“தாயகம்” நிறுவன போஷகர்,
புங்குடுதீவு.
01.04.2015.
socka.new-001
socka.new-002
socka.new-006
socka.new-007
socka.new-008
socka.new-009
sockalingam acadamey-feb.2015-001
sockalingam acadamey-feb.2015-003


sockalingam acadamey-feb.2015-004

ad

ad