புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2015

கிளிநொச்சியில் பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையம் திறப்பு


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் சேவை
நிலையமானது இன்று (02) மதியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையத்தினை திறந்து வைத்துள்ளனர்.
இதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சுகாதார துறைசார்ந்த பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதற்கமைவாக மாவட்டத்தில் உள்ள கிராமிய மற்றும் பிரதேச வைத்தியசாலைகளான தருமபுரம் வைத்தியசாலை அக்கராயன் வைத்தியசாலை முழங்காவில் வைத்தியசாலை மற்றும் வேரவில் வைத்தியசாலை உருத்திரபுரம் வைத்தியசாலை போன்ற வைத்திய சாலைகளில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் தாதியர், மருத்துவ துறைசார்ந்த உத்தியோகத்தர்களின் பற்றாக்குறைகள் தொடர்பாகவும் அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜிதசேனாரத்ன குறித்த விடயத்திற்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களால் தருமபுரம் பிரதேசவைத்திய சாலையில் ஆண் பெண் நோயாளர் விடுதிகளை அமைத்தல் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் இரண்டாம் கட்ட கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வன்னிப் பகுதியில் தாதியர் பயிற்சிக்கு உள்வாங்கும் போது க.பொ.த சாதாரணதரத்தில் விஞ்ஞான பாடத்தில் சி தர சித்தி பெற்றிருக்க வேண்டியது அவசியமானது என்ற விதிமுறையில் தளர்வுநிலை கையாளப்படவேண்டும் எனவும் யுத்த காலத்தில் இப்பகுதிகளில் கல்விச் செயற்பாடுகள் சீரற்றுகாணப்பட்டதால் உரிய பெறு பேறுகளை மாணவர்களால் எடுக்கமுடியாமல் போன நிலைமையினைக்கருத்தில் கொண்டு இதில் தளர்வு போக்கு கையாளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் அமைச்சரவையின் விசேட அங்கீகாரத்தினைப் பெற்று அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் கிளிநொச்சி பிரதேசம் பரந்த புவியில் பரப்பை கொண்டது எனவே இங்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனையும் நடைமுறைப்படுத்துவதாக சுகாதார அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்
இந்நிகழ்வின் போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை தவநாதன், சுகாதார அமைச்சின் செயலாளர்கள் மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் வைத்திய அதிகாரிகள் தாதியர் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ad

ad