புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2015

ஜூலை மாத பிற்பகுதியில் உள்நாட்டுப் பொறிமுறை உருவாக்கம்: மங்கள




இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில்,  உள்நாட்டுப் பொறிமுறையொன்றை விரைவாக உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையொன்று எதிர்வரும் ஜூலை மாத பிற்பகுதியில் உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில்,
உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு நிறைய வேலைகளில் ஈடுபட்டுள்ளது. 
இந்த உள்நாட்டுப் பொறிமுறைக்கான வரையறைகளை தீர்மானித்து, அதில் எது சிறந்தது என்பதை நாம் தெரிவு செய்வோம்.
செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பேரவை தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.
இதன்போது இலங்கை அரசாங்கம் இந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை செயற்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்றார்.

ad

ad