புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2015

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி அட்டவணையில் முதலிடம்



டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் தொடரின் 36வது போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான அணித்தலைவர் வாட்சன் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கருண் நாயர், மற்றொரு தொடக்க வீரரான அஜின்கியா ரஹானேவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கருண் அரைசதம் கடந்து 61 ஓட்டஙகளில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்தது. ரஹானே ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் கடந்து 91 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனையடுத்து 190 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 175 ஓட்டங்களில் 7 விக்கெட்டை இழந்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக டூம்னி அரைசதம் கடந்து 56 ஓட்டங்களும், யுவராஜ் சிங் 22 ஓட்டங்களும், சௌரப் திவாரி 28 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் ராஜஸ்தான் சார்பில் தவால் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, ஜேம்ஸ் பால்க்னர் மூவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக ரஹானே தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு சென்றது.

ad

ad