புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2015

வெசாக் தினத்தையிட்டு 488 கைதிகள் விடுதலை


புனித வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவது முள்ள சிறைச்சாலைகளிலிருந்து 488 சிறைக் கைதிகள் நேற்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைப் செய்யப் பட்டிருப்பதாக சிறைச் சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்ஹ தெரி வித்தார்.
இவர்களுள் 17 பேர் பெண் கைதிகளாவர்
கொலை, போதைவஸ்து கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம். கொள்ளை உள்ளிட்ட பாரதூரமான குற்றம் இழைத்தவர்களைத் தவிர சடடவிரோத மதுசாரம் தயாரித்தல் உள்ளிட்ட சிறு குற்றம் இழைத்தவர்கள் மற்றும் தண்டப் பணம் செலுத்த முடியாதவர்களே ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த புனித வெசாக் தினங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறையே மிகக் குறைந்தளவிலான சிறைக்கைதிகள் விடுதலை செய்யப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சுதந்திர தினம் மற்றும் புனித பாப்பரசரின் இலங்கை விஜயம் ஆகியவற்றை முன்னிட்டு அண்மையில் அநேகமான சிறைக் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதே அதற்கு காரணமாகு மென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிலும் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தே நேற்று அதிகூடிய எண்ணிக்கையான 50 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 09 பேர் பெண்களாவர் என்றும் அவர் தெரிவித்தார்.

ad

ad