புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2015

4 வருடங்களின் பின் நாடு திரும்பிய நபர் கைது


வெளிநாட்டுக்கு சென்று நான்கு வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய நபர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்டவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமையினாலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுகஸ்தோட்டை ஹமன்கொடை எனும் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் போது இந்திக்க சதுரங்க என்பவர் உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவரான இவர், வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார்.
இவர் இல்லாமல் வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதும் இவரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த நபர் கடந்த 2ம் திகதி நாடு திரும்பி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த போது அவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை, கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தவுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ad

ad