புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2015

சபாஷ்! பிரேசில் அணியில் இடம் பிடித்த முதல் இந்திய கால்பந்து வீரர்




கால்பந்து விளையாட்டுக்கு பெயர் போன பிரேசில் கால்பந்து லீக்கில் விளையாடி இந்திய வீரர் ரோமியோ
ஃபெர்னான்டஸ் வரலாறு படைத்தார். இந்திய வீரர் ஒருவர் பிரேசில் நாட்டில் தொழில்முறை கால்பந்து அணியில் இடம் பெறுவது இதுவே முதல் முறை.
கோவாவை சேர்ந்த 22 வயது ரோமியோ ஃபெர்னான்டஸ், இந்தியன் லீக் போட்டியில் டெம்போ அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் பிரேசிலை சேர்ந்த அத்லெடிகோ பெரைனிஸ் அணி ரோமியோ ஃபெர்னான்டசை தங்கள் அணிக்கு லோனில் ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து பிரேசிலுக்கு சென்ற ரோமியோ அத்லெடிகோ அணியில் இணைந்து அந்த அணி வீரர்களுடன் பயிற்சி எடுத்து வந்தார். நேற்று முதல் முறையாக அந்த அணிக்காக பிரேசில் லீக்கில் களமிறக்கப்பட்டார்.

                   
இந்த போட்டியில் அத்லெடிகோ பெரைனிஸ் அணியும் நாசினல் பி.ஆர் அணியும் மோதின. இந்த போட்டியின் போது 69வது நிமிடத்தில் அத்லெடிகோ வீரர் ரஃபின்காவுக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரராக ரோமியோ ஃபெர்னான்டஸ் களமிறக்கப்பட்டார். ரோமியோ ஃபெர்னான்டஸ் 17வது எண் ஜெர்சி அணிந்து இந்த போட்டியில் விளையாடினார். 

கரிஞ்சா, பீலே, ரொனால்டோ, ரொனால்டினோ என புகழ்பெற்ற கால்பந்து வீரர்களை உலகுக்கு தந்த பிரேசிலியன் கால்பந்து லீக்கில் இந்திய வீரர் ஒருவர் விளையாடுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த போட்டியில் ரோமியோவின் அணியான அத்லெடிகோ பெரைனிஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 
பிரேசில் நாட்டின் பரானா மாகாணத்தில் குர்திபா நகரைத் தலைமையிடமாக கொண்டு அத்லெடிகோ அணி 1924ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  கடந்த 2001 ஆம் ஆண்டு பிரேசிலியன் லீக் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தது. புகழ்பெற்ற இந்த லீக்கில்தான் சான்டோஸ், கொரிந்தியன்ஸ், சா பாலோ போன்ற அணிகள் விளையாடி வருகின்றன.

ad

ad