ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை செப்டெம்பர் மாதம் வெளியிடவுள்ள இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செய லாளர் ஜோன் கெரியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று காலை 9.00 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு யுத்தத்துக்குப் பின்னரான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் 13ஆவது திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்தும் இப்பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக நேற்றுக் காலை 8.00 மணியளவில் இலங்கை வந்தடைந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் காலையில் கொழும்பு வந்தடைந்த ஜோன் கெரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தலைவர்களையும் ஏனைய சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.