நாகாலாந்தில் அசாம் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அசாம் பாதுகாப்புப் படையை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.
மோன் மாவட்டத்தில் அமைந்துள்ள சங்க்லாங் சு என்ற பகுதியல் இச் சம்பவம் நடைபெற்றது. இப்பகுதியில் உள்ள முகாமில் இருந்து நோபுப என்ற இடத்திற்கு வாகனம் ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எட்டு வீரர்கள் பலியாயினர். ஆறுக்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும் 4 பேர் மாயமானதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.