புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2015

ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு எதிராக போர்க்குற்றம் செப்டம்பரில் அறிக்கை நிச்சயம்

முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு எதிராக போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஐக்கிய நாடுகள் தலைவி நவநீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நோர்வே இராஜதந்திர, முன்னாள் சமாதான தூதுவரும், முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் இது தொடர்பாக, ஆணைக்குழுவின் தலைவர் செயித்  அல் ஹூசேனுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடிதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக ஆதாரம் கொடுத்தவர்கள் தொடர்பான தகவல்களை  2031ஆம் ஆண்டு வரை வெளிப்படுத்த முடியாதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad