3 மாநில முதல்-மந்திரிகள் உள்பட 29 மத்திய மந்திரிகள் 16-ந் தேதி (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார்கள். மாவட்ட ரீதியாக சென்று பொதுமக்களை அவர்கள் சந்திக்கிறார்கள்.
வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷவர்த்தன், ராதா மோகன்சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 29 மத்திய மந்திரிகளும், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, குஜராத் முதல்-மந்திரி ஆனந்திபென் படேல், அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கத்தார் ஆகியோரும் தமிழகம் வருகிறார்கள்.
இதில், குஜராத் முதல்-மந்திரி ஆனந்திபென் படேல், சென்னையில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும், அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கத்தார் திருச்சி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார்கள். ஏனைய, மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில், எந்தெந்த மந்திரிகள் பங்கேற்பார்கள் என்ற பட்டியல் தயாராகி வருகிறது. மாவட்டந்தோறும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கவும், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறவும் முடிவு செய்யப்பட்டது.
மத்திய மந்திரிகள், நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக சென்று மக்களை சந்தித்து வந்தாலும், தமிழகத்திற்குத்தான் அதிக அளவில் 29 மத்திய மந்திரிகள் ஒரே நாளில் விஜயம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.