புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2015

மதுரை பிரவீனா மிஸ் கூவாகமாக தேர்வு: நடிகை ஷகிலாவை தத்தெடுத்த திருநங்கைகள் சங்கத் தலைவர்



விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். கடந்த 3 தினங்களாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய போட்டியாக கருத்தப்படும் மிஸ் கூவாகம் போட்டி திங்கள்கிழமை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

தமிழகத்தின் 36 மாவட்ட திருநங்கை தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து இந்த மிஸ்கூவாகம் போட்டியை நடத்தினர். இப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்கள், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து 72 திருநங்கைகள் பங்கேற்றனர். இவர்கள் இசைக்கு ஏற்றவாறு ஒய்யார நடை நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இவர்களின் நடையழகு, உடையழகு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு முதல் சுற்றில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

 பின்னர் இந்த 12 பேரில் நடையழகு மற்றும் உடையழகுடன் அவர்களின் அறிவுத் திறன் தொடர்பான கேள்விகள் கேட்டகப்பட்டன. நடை மற்றும் உடையழகுக்கு 25 மதிப்பெண்களும், அறிவுத் திறன் தொடர்பான கேள்விகளுக்கு 25 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன.

 இவர்களில் சிறப்பான நடை, உடை அழகுடன் கேள்விகளுக்கு பதில் அளித்த மதுரை பிரவீனா மிஸ் கூவாகமாக அறிவிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து அடுத்த இடத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சுஜீயும், 3-ம் இடத்தை மதுரையைச் சேர்ந்த ஹரீனியும் பெற்றனர்.

மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்ட மதுரை பிரவீனா கனிப்பொறியியல் பட்டம் பெற்றவர். இவர் மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டது குறித்து கூறுகையில் நான் மிஸ் கூவாகமாக தேர்வு செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மிக மகிழ்சியான தருணம் என்றார். அதேபோல் 2-ம் இடம் பெற்ற தூத்துக்குடி சுஜீயும், 3-ம் இடம் பெற்ற மதுரை ஹரினியும் தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். 

இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நடிகைகள் அனுராதா, ஷகிலா, பாலாம்பிகா ஆகியோர் பங்கேற்றனர். நடுவர்களாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர் பாரிபரமேஸ்வரன், சுதர்சனா, திருநங்கை தலைவர் ரேணுகா ஆகியோர் செயல்பட்டனர். இவ்விழாவின் போது திருச்சி திருநங்கைகள் சங்கத் தலைவர் மோகனாம்பாள் தனது மகளாக ஷகிலாவை தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.

ad

ad