புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2015

கருப்பு பணம் வைத்துள்ள 5 இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ்!


சுவிட்சர்லாந்து மத்திய வரி நிர்வாக அமைப்பு கருப்பு பணம் வைத்துள்ள 5 இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சேர்த்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இந்தியா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை அடுத்து, தங்கள் நாட்டில் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுமார் 40 பேரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை சுவிஸ் மத்திய வரி நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெயர் வெளியிடப்பட்டவர்களில், இங்கிலாந்து, ஸ்பெயின், ரஷியா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாட்டினர் உள்ளனர்.
ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டினரின் பெயர்களின் ‘இனிஷியல்' மற்றும் பிறந்த தேதிகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதர விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதில் இந்தியாவை சேர்ந்த Gurjit Singh Kochar, Syed Mohamed Masood, Sneh Lata Sawhney, Chaud Kauser Mohamed Masood and Sangita Sawhney ஆகிய 5 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் அவர்களின் பிறந்த தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் Sneh Lata Sawhney, Sangita Sawhney என்ற 2 பெண்களின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த 5 இந்தியர்களும் தங்களது விபரங்களை இந்திய அரசு அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என விரும்பினால், 30 நாட்களுக்குள் பெடரல் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டும் என Swiss Federal Tax Administration உத்தரவிட்டுள்ளது.

ad

ad