புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2015

பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் யாழ் விஜயம்


பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன்ஸ் டய்யூறிஸ் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஐயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்றைய தினம் காலை 9 மணிக்கு குறித்த சந்திப்பு நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது.
இதன்போது புதிய ஆட்சி தொடர்பாக வினவப்பட்டதாக சுவாமிகள் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கையில், புதிய ஆட்சி நல்லதொரு ஆட்சி எனவும் ஆனால் மீள்குடியேற்றம் மற்றும் சில விடயங்கள் பூரண திருப்பியில்லை எனவும் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
பிரிட்டன் உயர்ஸ்த்தானிகர், மதங்கள் ஒன்றிணைந்து ஒரு நல்லிணக்கத்தை உருவாக்க முடியுமா? என கேட்டதாகவும் எனினும் அவ்வாறான ஒரு வாய்ப்பை உண்டாக்கி கொடுத்தால் நாம் அதனை முயற்சிப்போம் எனவும் பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.
இன்றைய சந்திப்பின் போது நல்லை ஆதீன முதல்வருடன் செஞ்சொற் செல்வன் ஆறுதிருமுருகனும் இடம்பெற்றிருந்தார்.

ad

ad