புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2015

வித்தியா படுகொலை குற்றவாளிகளின் டீ.என். ஏ அறிக்கைக்காக காத்திருக்கின்றோம்!- பிரதிப் பொலிஸ்மா அதிபர்


புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் முழுமை பெற்று விட்டன. தற்போது மரபணுப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றோம் என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்கும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று யாழ்ப்பாண பொலிஸ் தலைமைகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அதன்போது புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் தற்போதைய நிலை என்ன என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பில் 9 பேரைக் கைது செய்து நீதீமன்றத்தின் ஊடாக விளக்கமறியலில் வைத்துள்ளோம்.
பொலிஸாரின் விசாரணைகள் பூர்த்தியாகி விட்டன. தற்போது கொழும்பில் இருந்து அழைக்கப்பட்ட விசேட விசாரணைக்குழு ஒன்று ( சீ.ஐ.டி) விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் குறித்த 9 பேரும் மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். எனவே தற்போது டீ.என்.ஏ அறிக்கையினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
அவை கிடைக்கப் பெற்றதும் அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதன் ஊடாக அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன் மேலதிகமாக யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணைகளை சீ.ஐ.டியினர் மேற்கொண்டு வருகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad