இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பையில் மோசமான தோல்வி, தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மூன்றா வது டெஸ்டில் தோல்வியடைந்து தொடரை வெல்ல முடியாமல் போனது போன்ற காரணத்தி னால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாகி டாம் ஹாரிஸன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பீட்டர் மூர்ஸ் குறித்து ‘‘பீட்டர் சிறந்த ஒருமைப்பாடு மிகுந்த ஒரு மனிதன். இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக அவர் பெரும் பங்களிப்பை அளித்துள்ளார்’’ என்று ஹாரிஸன் கூறியுள்ளார். மேலும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து அணியை சிறப்பானதாக கொண்டு செல்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.