புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2015

2 லட்சத்திடம் 100 கோடி தோல்வி!


குவாம் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
தகுதி சுற்றில் இந்திய அணி சந்திக்கும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.
ரஷ்யா உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.  இந்த பிரிவில் கடந்த 11ஆம் தேதி, பெங்களுருவில் நடந்த முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, ஓமன் அணியிடம் 2- 1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
இந்தியா- குவாம்
இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில், இன்று இந்திய அணி குவாம் அணியை எதிர்கொண்டது. குவாம் தலைநகர் ஹகத்தனாவில் இந்த போட்டி, காலை 11.45 மணியளவில் தொடங்கியது. இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்து அர்னாப் மாண்டல் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சுனில் சேத்ரி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
குவாம் முன்னிலை
முதல் பாதியின் 33வது நிமிடத்தில், குவாம் வீரர் அலெக்சான்டர்  லீக்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. ஷான் மால்கம் கிராஸ் செய்த பந்தை அவர் கோல்கம்பத்துக்கு மேல் தள்ளியதால், கோல் வாய்ப்பு வீணானது. முதல் பாதியில் குவாம் அணியே ஆதிக்கம் செலுத்தியது. 37வது நிமிடத்தில் ரையன் கே வீசிய த்ரோ பந்தை, குவாம் வீரர் பிரண்டென் மெக்டொனால்ட் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் குவாம் அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.
ட்ராவிஸ் நிக்லா அபார கோல்
பிற்பாதி ஆட்டத்திலும் குவாம் அணியின் ஆதிக்கம் தொடர்ந்து. 55வது நிமிடத்தில் மால்கம் கிராஸ் செய்த பந்தை  ட்ராவிஸ் நிக்லா தலையால் முட்டினார். ஆனால் பந்து கோல் கம்பத்திற்கு மேலே சென்றால் கோல் விழாமல் தப்பித்தது.  ஆனாலும் தொடர்ந்து இந்திய கோல் கம்பத்தை குவாம் வீரர்கள் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தனர்.
61வது நிமிடத்தில் ட்ராவிஸ் நிக்லா தனி ஆளாக பந்தை கடத்தி சென்று மிக நேர்த்தியாக கோல் அடித்தார். இதனால் குவாம் அணி 2-0 என்று முன்னிலை பெற இந்திய வீரர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவே சில நிமிடங்கள் பிடித்தது.
இந்தியா தோல்வி
பின்னர் 94வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்தார்.இத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்ததால்,இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்திய அணி ஃபிஃபா தரவரிசையில் 141வது இடத்தில் உள்ளது. குவாம் அணி 174வது இடத்தில் உள்ளது. ஜப்பான் அருகே பசிபிக் கடலில் உள்ள இந்த குட்டி தீவின் மொத்த மக்கள் தொகையே 2 லட்சத்துக்கும் குறைவுதான்.
இந்தியாவுக்கு கடைசி இடம்

புள்ளிகள் பட்டியலில் 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று குவாம் அணி முதலிடத்தில் உள்ளது. ஓமன் 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ஈரான் இன்றுதான் முதல் ஆட்டத்தில் களமிறங்குகிறது. துர்க்மெனிஸ்தானும் இந்தியாவும் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

ad

ad