புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 ஜூன், 2015

பூதாகரமாக கிளம்பும் மிக் 27 ரக விமான ஒப்பந்த விவகாரம்! மர்ம வங்கி கணக்கை கண்டுபிடித்த புலனாய்வுத் துறை!


கடந்த 2006ம் ஆண்டு உக்ரைய்னிடம் இருந்து இலங்கை 4 மிக் 27 ரக போர் விமானங்களை வாங்கியது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த விற்பனையில் பிரித்தானியாவில் உள்ள பெல்லிமிஸ்ஸா என்ற நிறுவனமும்  ஈடுப்பட்டதாக தகவல் வெளியாகியது. 
இலங்கையில் இருந்து பணம் இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மிக் 27 ரக விமான விற்பனையில் முறைகேடு நடந்ததாக  இலங்கை போர் விவகாரம் தொடர்பான செய்தியாளரான இக்பால் அதாஸ் சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகையில் கட்டுரை எழுதினார். பின்னர் இந்த விவகாரம் ஊடக வெளிச்சத்துக்கு வந்தது.  

இது தொடர்பாக  அப்போது ராணுவ அமைச்சராக இருந்த கோத்தபாய ராஜபக்சவிடம் நிதி தொடர்பான குற்றங்களுக்கான புலனாய்வு பிரிவினர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த கோத்தபாய, போர் விமானங்கள் வாங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் அனைத்தும் சரியான முறையில் தான் நடைபெற்றது என்று தெரிவித்தார். 

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்கப்பட்டபோது இந்த விவகாரத்துக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனவும் ரோசன் குனித்திலகே(அப்போதைய  விமானப்படை தலைவர்) தான் இந்த ஒப்பந்தத்துக்கு முழு பொறுப்பு என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஏதாவது முறைகேடு நடந்திருந்தால் அவரே இதற்கு பொறுப்பு என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்ரர்போல் தலைமையகத்தில் இருந்து இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வந்த தகவலில் பில்லிமிஸ்ஸா என்று ஒரு நிறுவனமே இல்லை  என்று தெரியவந்தது.  அந்த நிறுவனம் தொடர்பாக British Virgin Islandல் தொடங்கப்பட்ட வங்கி கணக்கை சோதனை செய்தபோது இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த தகவலை முதலில் ஊடக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த இக்பால் அதாஸ்க்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் இலங்கைகை விட்டு வெளியேற முயற்சி செய்ததாகவும் விக்கிலீக்ஸ் மூலம் தகவல் வெளியாகியாகியுள்ளது. அதில் மீக் 27 ரக வீமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைப்பெற்றிருப்பதாக சண்டே டைம்ஸ் பத்திரிகையில் இக்பால் கட்டுரை எழுதிய இரண்டு நாட்களில் அவருக்கு அளிக்கப்பட்ட பொலிஸ் காவல் விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அவரது வீட்டின் முன் வந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இதுதொடர்பாக ரொபர்ட் ஓ பிளேக் ( அப்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதர் ) கோத்தபாயவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  இக்பாலுக்கு ஏதாவது நிகழ்ந்தால் இலங்கை கடுமையாக நிகழ்வை சந்திக்கும் என்று எச்சரிக்கை செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.