புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2015

600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய கோடீஸ்வரர்

டெல்லியில் 600 கோடிக்கு அதிபதியான கோடீஸ்வரர் ஒருவர், தனது சொத்துக்கள் அனைத்தையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார்.
டெல்லியில் உள்ள பிரபல பிளாஸ்டிக் வியாபாரியான பன்வர்லால் ரகுநாத் தோஷி. சுமார் ரூ.600 கோடிக்கு அதிபதியான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
தனது தந்தையிடம் ரூ.30 ஆயிரம் கடனாகப் பெற்று பிளாஸ்டிக் வர்த்தகத்தில் இறங்கிய இவர், போராட்டத்தை சந்தித்த போதிலும், அவரது வர்த்தக மதிப்பு உயர்ந்து ரூ.600 கோடியைத் தாண்டியுள்ளது.
ஜைன மத பிரச்சாரங்களால், 1982-ம் ஆண்டு முதன்முறையாக ஈர்க்கப்பட்ட அவர் ஜைன மதத் துறவியாக விரும்பினார்.
இதற்கு இவரது குடும்பத்தாரிடம் பலத்த எதிர்ப்பு இருந்த நிலையில், இவர் கடந்த ஆண்டு தனது குடும்பத்தை சமாதானப்படுத்தி துறவறத்துக்கு அனுமதி வாங்கியதுடன் அதனை ஒரு விழாவாக கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று `வர்சி தான்' எனும் ஜைன மத ஊர்வலம் நடைபெற்றது.
சுமார் 7 கி.மீ. தூரம் வரை நீண்ட இந்த ஊர்வலத்தில் ஆயிரம் ஜைன துறவிகள், 12 தேர்கள், 9 யானைகள், 9 ஒட்டக வண்டிகள் மற்றும் பாரம்பரிய இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று, இவர் ஜைன மதத் தலைவர் ஸ்ரீ குணரத்ன சுரீஷ்வர்ஜி மகராஜின் கீழ் சீடராக தன்னை இணைத்துக்கொண்டார்.
அகமதாபாத் கல்வி மைதானத்தில் நடந்த இந்த விழாவில், ஜைன மத அமைப்புகளுக்கு ரூ.25 கோடி மதிப்புள்ள‌ நன்கொடைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியைக் காண சுமார் ஆயிரம் சாதுக்கள் தவிர, 1.5 லட்சம் மக்கள் கூடியுள்ளனர்.

ad

ad