புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2015

முத்தரப்பு மோதலாக வெடிக்கும் பொதுத்தேர்தல்?


எதிர்வரும் பொதுத் தேர்தல் முத்தரப்பு மோதலாக அமையும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் மூன்று குழுக்கள் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மஹிந்த மைத்திரி தரப்புக்கு இடையில் நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
 
மஹிந்த ராஜபக்ஸ தரப்புடன் இணைந்து செயற்படுவதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முற்று முழுதாக நிராகரித்துள்ளார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழிநடத்த உள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் வழிநடத்த உள்ளார்.
 
இதேவேளை ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு தரப்பும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad