புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஜூன், 2015

அனுராதபுரத்தில் கூட்டம் மஹிந்த தலைமையில் நடைபெறவுள்ளது

அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மஹிந்த ஆதரவு கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.
“ஈட்டிய வெற்றியை பாதுகாப்போம், மஹிந்தவுடன் எழுவோம்” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் கூட்டத் தொடரின் அடுத்த கூட்டம் அனுராதபுரத்தில் நடத்தப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்பார் எனவும், கூட்டத்திற்கு மஹிந்த தலைமை தாங்குவார் எனவும் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சுமார்  நூறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் வாரம் முதல் இரண்டு வாரங்களில் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றிருந்த மஹிந்த, மேடையில் ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த அனுராதபுரம் கூட்டத்தின் மேடையில் ஏறுவார் என தெரிவிக்கப்படுகிறது.