புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2015

சுவிஸ் செங்காலன் கதிர்வேலாயுதசுவாமி கோவிலில் சிறப்புற இடம்பெற்ற ரதோற்சவம















செங்காலன் சென்மார்க்கிரெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய ரதோற்சவம் நேற்று பக்தர்கள் அரோகரா கோசம் எழுப்ப
மேளவாத்தியம் முழங்க பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கடந்த 29.05.2015 ஆம் திகதி கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகிய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று ஒன்பதாவது நாள் ரதோற்சவம் இடம்பெற்றது.
காலை 7 மணிக்கு விசேட அபிசேகம், பூசை, தம்பபூசை என்பன இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்றது.
வசந்த மண்டப பூசையை அடுத்து சண்முகார்ச்ச்னை இடம்பெற்றது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பா.ஜோதிநாதக் குருக்கள் தலைமையில் பிரபல குருமார்களான என்.சர்வேஸ்வரக் குருக்கள், கு.குகேஸ்வரக்குருக்கள், உ.ஜோதீஸ்வரக்குருக்கள், ஆர்.சசிதரக்குருக்கள்,   எஸ் .சுப்பிரமணியக்குருக்கள், வா.கைலாசநாதக்குருக்கள், து.திவ்விய சர்மா ஆகியோர் சண்முகார்ச்ச்னை பக்திமயமாக தெய்வீக மணங்கமழ நிறைவேற்றி வைததனர்.
தொடர்ந்து சிறந்த நாதசுர, தவில் கலைஞர்களின்  மல்லாவி நாதத்துடன் கதிர்வேலாயுதர் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சியளித்தார்.
உள்வீதி உலா முடித்துக்கொண்ட கதிர்வேலாயுதர் தேரில் ஆரோகணித்து வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்காட்சியளித்தார்.
பெரும் எண்ணிக்கையானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூரச்சட்டி ஏந்தியும் பிரதிட்டை செய்தும் தமது நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.
சுவிசில் பல்வேறு மாநிலங்களிலிருந்து  புலம்பெயர் தமிழர்களும், சுவிஸ் நாட்டவர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு ரதோற்சவத்தை கண்டுகளித்தனர்.

ad

ad