8 ஜூன், 2015

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு இன்றும் பிணை வழங்கப்படவில்லை.


திவிநெகும திட்டத்தில் நிதி மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவித்து பசில் ராஜபக்ச உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச, முன்னாள் பொருளாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நான்கு பேரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு உயர் நீதிமன்றில் பசில் ராஜபக்ச சட்டத்தரணி ஊடாக இன்று பிணை கோரியிருந்தார்.
எனினும் இந்த பிணை மனு குறித்து எதிர்வரும் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதவான் குசலா சரோஜினி தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனு குறித்து தீர்மானம் வரும் வரையில் இந்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்படக் கூடாது என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் கோரியிருந்தது.
இதன்படி எதிர்வரும் 15ம் திகதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது