புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 ஜூன், 2015

வில்பத்துவின் அலங்கோலம் ஜனாதிபதி கவல

வில்பத்துவின் ரம்மியமான சூழல் சீர்குலைந்துள்ளதை தான் தனது இரு கண்க ளாலும் பார்த்ததாக ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்றபோது, விமானத்தில் இருந்தபடியே வில்பத்து வின் ரம்மியமான சூழல் சீர்குலைந்துள்ளதை தனது இரு கண்களாலும் பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இது அரசியல்வாதிகள் எடுத்த தவறான அரசியல் தீர்மானங்களின் விளைவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதியோ இல்லை வியாபாரியோ எவராக இருந்தாலும் சூழலையும், அதன் இயற்கைத் தன்மையையும் அழிக்க விடமாட்டேன். மட்டுமன்றி, தனது ஆட்சிக் காலத்தில் அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற சுற்றாடல் பாதுகாப்பு தினம் தொடர்பிலான வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.