புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2015

திஸ்ஸ அத்தநாயக்கவை ஆஜராகுமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அழைப்பு

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு, இலஞ்சம்
மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட சம்பவம் குறித்து வாக்குமூலம் ஒன்றை வழங்க நாளை மறுதினம் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமான விசாரணைகளுக்கு தான் ஒத்துழைப்பு வழங்குவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில், அந்த கட்சியில் இருந்து விலகி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொண்டு சுகாதார அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் அமைச்சு பதவியை வழங்குவது இலஞ்சம் வழங்குவதற்கு ஈடான குற்றம் என ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல், விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ad

ad