புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2015

முஸ்லிம் மக்களையும் தம்முடன் இணையுமாறு வேண்டுகோள் -இணைவார்களேயானால் முதல் 03 மட்டத்தில் ஆசனங்களை கைப்பற்ற முடியும் -சம்பந்தன்


இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றையதினம் காலை 10.30 மணியளவில் திருகோணமலையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெனார்த்தனன், முன்னாள் நகராட்சிமன்ற தலைவர் செல்வராஜா,
மற்றும் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களான துரை ரட்ணசிங்கம் யதீந்திரா, கனகசிங்கம், புவனேஸ்வரன், சிவரூபன், திருமதி. தர்மராஜா மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன்,
தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமை பற்றியும் மக்களின் வாக்குரிமை பற்றியும் விளக்கியதோடு, முஸ்லிம் மக்கள் தமக்கென்றதொரு கட்சி, ஆளுமையை வைத்துக்கொண்டு, ஏன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
அத்துடன் முஸ்லிம் மக்களது எதிர்காலம் மத்திய அரசாங்கத்தின் கையில் இல்லையெனவும் அவை பிராந்திய அரசின் கையிலேயே இருப்பதாகவும் முஸ்லிம் மக்களையும் தம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன், அவ்வாறு முஸ்லிம் மக்கள் இணைவார்களேயானால் முதல் 03 மட்டத்தில் ஆசனங்களை கைப்பற்ற முடியும் என தெரிவித்தார்.

ad

ad