புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2015

கிழக்கில் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் தொடரும் மதமாற்ற செயற்பாடுகள்!

மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் வறுமை நிலையில் உள்ள தமிழ் குடும்பங்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் பணிகள் தற்போது
மும்முரமாக நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் சவூதியில் உள்ள தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக நடைபெற்ற வருவதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இரண்டு தினங்களில் எட்டுக் குடும்பங்கள் இவ்வாறு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வறுமையினை பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இவர்கள் ஆரையம்பதிஇ தேற்றாத்தீவுஇ நாவற்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ad

ad