புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2015

இந்த வருடத்திற்குள் யாழ்.குடாவிற்கு 100% மின்சாரம்; உறுதியளித்தார் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்


யாழ்.மாவட்டத்தில் இந்த ஆண்டுக்குள் 100 % மின்சாரம் கிடைக்கும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். 
 
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின்  வடக்கு மாகாண பதில் பொது முகாமையாளர் அலுவலக கட்டட தொகுதி அமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.    
 
அவர் மேலும்  தெரிவிக்கையில்,  
 
2010 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வரும்போது மின்சாரப்பிரச்சினை காணப்பட்டது. சரியாக மின்சாரத்தை வழங்கமுடியாத நிலை காணப்பட்டது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மின்சாரம் வழங்கும் திட்டமும் கடந்தகால யுத்தத்தினால் நிறுத்தப்பட்டு இருந்தது. 
 
எனவே மின்சாரத்தை பெறுவதற்கு அமைத்துத்தந்த யப்பான் நாட்டுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் நன்றிகளைக் கூறுகின்றோம். அத்துடன் இந்த கட்டடத்தை அமைப்பதற்கு நியமித்த பொறியியலாளர் மதிக்கப்பட்ட தொகையினை விட குறைந்த செலவில் இந்த கட்டடத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.
 
மீதமுள்ள பணத்தை மின்சாரம் இல்லாது வறுமையான கிராமங்களுக்கு வழங்குவதற்காக ஒப்படைத்துள்ளார். கடந்த காலங்களில் 50% மின்சாரமே மக்களுக்கு கிடைத்தது. 
 
இதனால் சுமார் நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் மின்சாரம் தொடர்ந்தும்  தடைப்பட்டிருந்தது.  எனினும்  தற்போது 90 % வீதமான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
எனினும்  இந்தவருட இறுதிக்குள்  100% மின்சாரம் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதேபோல வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும்  முல்லைத்தீவினையும் எதிர்பார்க்கின்றோம்.
 
அத்துடன்  வவுனியாவில் இருந்து மன்னார் ஊடாக புதிய திட்டம் ஒன்றினை செயற்படுத்த எண்ணியுள்ளோம்.
 
மேலும் குறைந்தளவு வருமானம்  பெறும்  மக்களுக்கு இலவச மின்சார இணைப்பினை வழங்குவது என்றும்  தீர்மானம் எடுக்கப்பட்டது. இருப்பினும்  இவ்வருடம் முதல் குறித்த விடயம்  தொடர்பில் புனர்வாழ்வு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

ad

ad