புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2015

: கிரீசில், ஐரோப்பிய கூட்டமைப்பின் சிக்கன நடவடிக்கை தொடர்பான பொது ஓட்டெடுப்பு நடைபெற்றது.மொத்தம், 1.10 கோடி மக்கள் தொகை கொண்ட கிரீசில், 99 லட்சம் பேருக்கு வாக்குரிமை உள்ளது. அவர்கள், பள்ளிகள், கல்லுாரிகளில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடிகளில்
, நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.உள்ளூர் நேரப்படி, காலை, 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கி, இரவு, 7:00 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து, இரவு, 9:00 மணியளவில், ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. நள்ளிரவு முதல் முடிவுகள் வெளிவரத் துவங்கின. நாளை காலைக்குள், இறுதி முடிவு தெரிந்து விடும். 

கிரீஸ், 22.61 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதில், பன்னாட்டு நிதியத்திற்கு, 10,500 கோடி ரூபாய் கடன் தவணையை, ஜூன், 30ம் தேதிக்குள் செலுத்த கிரீஸ் தவறிவிட்டது. இதனால், அதை, 'கடன் தவணையை செலுத்த தவறிய நாடு' என, ஐரோப்பிய நிதி ஸ்திரத்தன்மை நிதியமான - இ.எப்.எஸ்.எப்., அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வளர்ந்த நாடுகளில், கிரீஸ் முதன் முதலாக இத்தகைய நிலையை சந்தித்துள்ளது.மொத்த கடனில், இ.எப்.எஸ்.எப்.,க்கு, கிரீஸ், 10.12 லட்சம் கோடி ரூபாய் தர வேண்டும்.

இதனிடையே, கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் டிசிப்ரஸ், கடனை திரும்ப செலுத்த, இரண்டு ஆண்டுகள் அவகாசமும், இ.எப்.எஸ்.எப்., இடம் இருந்து, மேலும், 2.10 லட்சம் கோடி ரூபாயும் கோரினார். இத்துடன், பிரசல்ஸ் ஐரோப்பிய நிதியமைச்சர்கள் குழு தெரிவித்த சிக்கன நடவடிக்கைகளில், ஒரு சிலவற்றை மட்டும் அமல்படுத்த சம்மதித்தார்.ஆனால், அதை ஏற்க மறுத்த குழு, தன் பரிந்துரையை முழுவதுமாக அமல்படுத்தினால் மட்டுமே, கிரீசுக்கு உதவ முடியும் என, திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இதனிடையே, ஐரோப்பிய கூட்டமைப்பின் சிக்கன நடவடிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து அறிய, பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என, அலெக்சிஸ் டிசிப்ரஸ் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.அதன்படி, பொது ஓட்டெடுப்பு நடந்துள்ளது.ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீசுக்கு, பொது ஓட்டெடுப்பு மூலம், மேலும், 175 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. ஆனால், கடந்த ஜனவரியில் நடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, இது, 50 சதவீதம் தான் என, ஆளும் கட்சி கூறுகிறது.

ad

ad