Shritharan Sivagnanam 11 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.
ஓர் அணியில் நிற்பதன் மூலமே எங்கள் தமிழர்கள் தீர்வை எட்டமுடியும்
பூநகரி மக்கள் அமைப்பு பிரநிதிகள் தெரிவிப்பு
பூநகரி மக்கள் அமைப்பு பிரநிதிகள் தெரிவிப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாக மக்கள் சந்திப்புக்களை கிராமங்கள் தோறும் நடாத்தி வருகின்றனர்.பூநகரி கரைச்சி பிரதேசசெயலர் பிரிவுகளில் இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று பூநகரி நல்லூரில் பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட கட்;சி பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.இதில் பூநகரி பிரதேச கட்சியின் முக்கியஸ்த்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் கருத்துக்களை தெரிவித்த பூநகரி பிரதேச அமைப்புக்களின் பிரநிநிதிகள்
இதுவரை காலமும் நாம் பல்வேறு தேர்தல்களை எதிர்கொண்டபொழுதும் இம்முறை வருகின்ற இந்தத்தேர்தல் மிக முக்கியமானது என்பதையும் எமது நீண்டகால உரிமை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வை கொண்டு வரப்போகின்றதேர்தல் என்பதாலும் இம்முறை எமது மக்கள் ஓரணியில் செயற்பட கருத்தொருமைப்பட்டிருப்பதை நாம் அறியக்கூடியதாக உள்ளது.
எமது தேசிய அமைப்பாக எமது மக்களை சர்வதேச அளவில் பிரநிதிதுவப்படத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் அதிக ஆசனங்கள் பலப்படுத்தி எமது மக்களின் பேரம் சக்தியை பலப்படுத்தி எமது தீர்வை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
எமது கிடைக்கின்ற ஜனநாயக பெரும் பலமே எமது நிரந்தரமான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பொருத்தமாக அமையும்.அரசோடு இணைந்து அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டவர்களால் எமது மக்களின் நிம்மதியை பெற்றுக்கொண்டு வரமுடியவில்லை.
ஆனால் கடந்த ஜனவரி எட்டாம் திகதி தமிழ் மக்கள் எல்லோரும் ஒரணியில் ஒரு மாற்றத்துக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆணையை ஏற்று வாக்களித்த காரணத்ததால் இன்று சில மாற்றங்கள் தென்படுவதை உணரமுடிகின்றது.எனவே மாற்றத்தின் தொடர்ச்சியாக இந்த தேர்தலையும் கருதி நாம் ஓரணியில் நிற்போம் என தெரிவித்தனர்.
இதே வேளை கிளிநொச்சி திருநகர் பிரதேசத்திலும் திருநகரின் மூத்த தலைவர் வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட அரசியல் தேர்தல் கருத்துக்களை புத்திஜீவிகள் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள்