புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2015

சரித்திர ரீதியாக வாழ்ந்த மக்கள் சுயாட்சி பெற உரிமையுடயவர்கள்; சம்பந்தன் தெரிவிப்பு

Fotor072803547

பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்ற நாடுகளில் இருக்கின்ற ஆட்சி முறைகள் சம்பந்தமான ஒழுங்குகளின் அடிப்படையில், இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு, வட கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் அவர்கள் பூரண சுயாட்சியைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சாவகச்சேரியில்  ஞாயிற்றுக்கிமை இரவு இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் அருந்தவபாலனுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் எமது மக்கள் தொடர்பான சகல பிரச்சினைகளையும் கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மீள்குடியேற்றம், இராணுவ மயமாக்கலை இல்லாமல் செய்தல், காணிகள் தொடர்பான பிரச்சினைகள், கைதிகள் சம்பந்தமான பிரச்சினைகள், பெண் தலமைத்துவ குடும்பங்கள் தொடர்பான பிரச்சினைகள், மற்றும் முன்னாள் போராளிகள் சம்பந்தமான பிரச்சினைகள் என பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியல் தொடர்பான பிரச்சினைகளை ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தங்களின் அடிப்படையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், நாங்கள் ஒரு தனித்துவமான இனம், தேசியன இனம், எமக்கு ஒரு கலையுண்டு, பண்பாடுண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் சபையின் குடியியல் சம்பந்தமான ஒப்பந்தத்தில், ஒரு தனிப்பட்ட மக்களுக்கு சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துண்டு. அதனடிப்படையில் தான் எமது தேர்தல் பிரசாரம் அமைந்துள்ளது என சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஒருமித்த நாட்டுக்குள் பிளவு ஏற்படாமல், அதிகாரம் எங்களுக்கு   முழுமையாக பகிந்தளிக்கப்படல் வேண்டும். தேசிய பாதுகாப்பு, வெளிவிவகாரம், நாணயம் தவிந்த அதிகாரங்கள் எங்களுக்குப் பகிர்தளிக்கப்பட வேண்டும். அவ்வாறானதொரு காலம் வந்துகொண்டிருக்கிறது எனவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad